துலீப் கோப்பை அரையிறுதியில் வடக்கு
மண்டலத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தெற்கு மண்டலம் அபார வெற்றி பெற்றது. 181 ரன்கள் என்ற இலக்கை தெற்கு மண்டலம் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து எட்டியது (நிதேஷ் 5 விக்கெட்). செப். 6 முதல் 10 வரை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில், தெற்கு மண்டல அணி இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணியை எதிர்கொள்கிறது.