நாமக்கல்லில் முட்டை விலை 25காசுகள் குறைந்தது

31பார்த்தது
நாமக்கல்லில் முட்டை விலை 25காசுகள் குறைந்தது
நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் மூலம் நாள்தோறும் சுமார் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு முட்டை கொள்முதல் விலை ரூ.6.25-ஆக இருந்து வந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் 25 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டை விலை ரூ.6-ஆக குறைந்துள்ளதாகவும், நுகர்வு குறைந்ததே இதற்குக் காரணம் எனவும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி