முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்வு

0பார்த்தது
முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் இன்று 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்த பிறகு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. நேற்று 20 காசுகள் உயர்ந்து ரூ.6.10 காசுகளாக விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.6.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டையின் விலை ரூ.7.50 முதல் ரூ.8 வரை விற்கப்படுவதால் ஏழை, சாமானிய மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி