நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் இன்றி ரூ. 5.70 ஆகவே தொடர்கிறது. கடந்த 21ஆம் தேதி 10 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், 4வது நாளாக அதே விலையில் நீடிக்கிறது. சென்னையில் கொள்முதல் விலை ரூ.6.25 காசுகளாக உள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டையின் விலை ரூ.6.50 முதல் ரூ.7 வரை விற்பனையாகிறது. கனமழை எதிரொலியால் முட்டை உற்பத்தி பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில், வரும் நாட்களில் விலை உயருமா என்பதில் தெளிவில்லை.