நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ.6 ஆக தொடர்கிறது.
2 நாட்களுக்கு முன்பு நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, முட்டை கொள்முதல் விலை ரூ.6.25 காசுகளாக இருந்து வந்தது. கார்த்திகை மாத பிறப்பையொட்டி முட்டை நுகர்வு குறைந்ததன் காரணமாகவே இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ.7 முதல் ரூ.7.50 வரை விற்கப்படுகிறது.