முட்டை கொள்முதல் 20 காசுகள் சரிவு

21பார்த்தது
முட்டை கொள்முதல் 20 காசுகள் சரிவு
நாமக்கல் பண்ணைகளில் முட்டையின் கொள்முதல் விலை 20 காசு சரிந்துள்ளது. இதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பதால் முட்டை நுகர்வு குறைந்துள்ளதே விலை சரிவுக்கு காரணம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ.7 முதல் ரூ.7.50 வரை விற்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி