சென்னை கொளத்தூரில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த முதியவர் ஒருவர் இன்று (அக்.31) தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரிடம் குழந்தைகள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர் டேவிட் என்பவரை போலீசார் பிடித்து ஒப்படைத்தனர். இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது, போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பியோடினார். இதையடுத்து, அவரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.