திருவெறும்பூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயின் வெற்றியை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கில் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி தவெக எம்எல்ஏ விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பரப்புரையின்போது குழந்தைகளைப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.