டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்த புகாரில், 2 நாட்களில் 168 ஊழியர்களைத் தமிழக அரசு 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து சென்னை புறநகரில் 250-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் திடீரென அடைக்கப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் பார்களில் குவிந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.