
அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள புகழ்பெற்ற பத்திரகாளி அம்மன் கோவிலின் கோபுரத்திற்கு வர்ணம் பூசும் பணிகள் மற்றும் கோவிலைச் சுற்றி நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஹரிபாஸ்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவில் முகவைதாரர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







