
சிறுத்தை அட்டகாசம்: வனத்துறையை கண்டித்து சாலை மறியல்
ஈரோடு மாவட்டம் கோட்டை புதூர் செக்போஸ்ட் அருகே கள்ளிப்பட்டி மூவிஸா கோயில் கரட்டில் கடந்த இரண்டு வருடங்களாக சிறுத்தை ஒன்று ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகளை வேட்டையாடி வருகிறது. இன்று அதிகாலை ஒரு மாட்டு கன்று குட்டியை பிடித்து தின்றதால், அப்பகுதி மக்கள் கோட்டை புதூர் செக்போஸ்ட் முன் வனத்துறையை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.















