எம்.ஜி.ஆருடன் நடித்த பிரபல நடிகை காலமானார்

58பார்த்தது
எம்.ஜி.ஆருடன் நடித்த பிரபல நடிகை காலமானார்
MGR இயக்கி நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் ‘பச்சைக்கிளி.. முத்துச்சரம்’ பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த தாய்லாந்து நடிகை மெட்டா ரூங்ராட் (83) காலமானார். தாய்லாந்து திரையுலகில் 180-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற இவர், வயது முதிர்வு மற்றும் அல்சைமர் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகளால் பாங்காக்கில் உள்ள தனது இல்லத்தில் நேற்று (நவ்.4) இயற்கை எய்தினார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் தடம் பதித்த இவரின் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி