பிரபல அமெரிக்க எழுத்தாளரும் பெண்ணுரிமை போராளியுமான குளோரியா ஸ்டீனம் 92 வயதில் நியூயார்க் நகரில் காலமானார். 1960, 70களில் அமெரிக்காவின் இரண்டாம் அலை பெண்ணுரிமை இயக்கத்தின் முக்கிய முகமாகத் திகழ்ந்தார். ‘Ms.’ இதழின் இணை நிறுவனராகவும் செயல்பட்டார். பெண்களின் சமத்துவம், இனப்பெருக்க உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்காக பல தசாப்தங்களாக குரல் கொடுத்தார். 2013-ல் அமெரிக்காவின் உயரிய குடிமக்கள் விருதான அதிபர் சுதந்திரப் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.