சிவகங்கையில் விவசாயி ஓட ஓட விரட்டிக் கொலை

0பார்த்தது
சிவகங்கையில் விவசாயி ஓட ஓட விரட்டிக் கொலை
சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே பட்டப்பகலில் விவசாயி ஒருவர் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைவீதிக்குச் சென்ற விவசாயி மகேஸ்வரன் (40) என்பவரை மர்ம கும்பல் விரட்டிச் சென்று தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி