பேருந்திலிருந்து கீழே விழுந்த பெண் நடத்துநர் உயிரிழப்பு

27பார்த்தது
பேருந்திலிருந்து கீழே விழுந்த பெண் நடத்துநர் உயிரிழப்பு
தெலங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் அக்., 25 அன்று அரசுப்பேருந்தில் பயணச்சீட்டு மீதிப் பணம் தொடர்பான தகராறில், மௌனிகா என்ற பயணி தள்ளியதில் பெண் நடத்துநர் பிரவலிகா பேருந்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்தார். ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு அவர் உயிரிழந்தார். பத்து மாதங்களுக்கு முன்புதான் இவர் பணியில் சேர்ந்தார். ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரவலிகாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையுடன் இழப்பீடு வழங்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி