ஹோட்டலில் 2 மனைவிகளுக்கு இடையே சண்டை.. கணவர் மயக்கம்

6231பார்த்தது
ஹோட்டலில் 2 மனைவிகளுக்கு இடையே சண்டை.. கணவர் மயக்கம்
எகிப்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஹோசம் ஹசன், தனது தற்போதைய மற்றும் 2வது மனைவிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையை தடுக்க முயன்றபோது மயங்கி விழுந்தார். சொகுசு விடுதியில் விடுமுறையை கழித்தபோது, முதல் மனைவிக்கும், 2வது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. முன்னாள் மனைவியின் பிள்ளைகள் ஹசனை இழுத்துச் செல்ல முயன்றபோது கைகலப்பு ஏற்பட்டது. அப்போது 2வது மனைவியின் முகத்தில் சூடான காபியை ஊற்றியுள்ளார். இந்த அதிர்ச்சியில் ஹசன் மயங்கினார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்.

தொடர்புடைய செய்தி