அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் முஸ்லிம் உறுப்பினராக ஜனநாயக கட்சியை சேர்ந்த டாக்டர் அப்துல் எல்-சையத் (42) தேர்வாகி வரலாற்று சாதனை படைத்துள்ளார். மிச்சிகன் மாநிலச் செனட் தொகுதிக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக்கைக் கடுமையாகப் போராடித் தோற்கடித்து அவர் வெற்றி பெற்றுள்ளார். பிரசாரத்தின் போது தன் மீது தொடுக்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு பிரசாரங்கள் மற்றும் வதந்திகளை தகர்த்தெறிந்து அவர் இம்மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.