ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய வீரர்களின் அதிரடி பந்துவீச்சால் நிலைகுலைந்த நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் குர்னூர் பிரார் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்ய ஆயத்தமாகி வருகிறது.