கடும் பனிப்பொழிவு, ஐயப்ப பக்தர்கள் விரதம் மற்றும் திருக்கார்த்திகை திருநாள் எதிரொலியாக நெல்லை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,500-க்கும், பிச்சிப்பூ ரூ.1,500-க்கும், நந்தியாவட்டை ரூ.350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ரோஜாப்பூ, வெள்ளை செவ்வந்தி மற்றும் அரளிப்பூ தலா ரூ.300-க்கும், சம்பங்கிப்பூ ரூ.க்கும், கேந்திப்பூ ரூ.80-க்கும் விற்பனையாகி வருகின்றன.