திமுக இளைஞரணி மாநாட்டிற்காகத் திருவண்ணாமலை மலப்பாம்பாடி ஏரியிலிருந்து முறைகேடாக ரூ.8 கோடி மதிப்பிலான மண் அள்ளி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட புகாரில்,
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (DVAC) அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார். முன்னதாக இப்புகார் தொடர்பாக எ.வ.வேலு மற்றும் அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.