தவெகவில் இணைந்த முன்னாள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள்

3905பார்த்தது
தவெகவில் இணைந்த முன்னாள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள்
தவெக கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் பனையூர் தலைமை நிலைய அலுவலகத்தில் பிரம்மாண்ட இணைப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.சீனிவாசன், டாக்டர் மாலா ஆகியோர் தங்களை தவெகவில் இணைத்து கொண்டனர். மேலும், மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.

தொடர்புடைய செய்தி