விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் நேரடி ஏற்றுமதி சேவை தொடக்கம்

2898பார்த்தது
விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் நேரடி ஏற்றுமதி சேவை தொடக்கம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் நேரடி சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேவைகளை அம்மாநில முதல்வர் சதீசன் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். இதுவரை சரக்கு மாற்று மையமாக மட்டுமே செயல்பட்டு வந்த இத்துறைமுகம், இனி நேரடி ஏற்றுமதி-இறக்குமதியை கையாள தொடங்குவதன் மூலம் சரக்கு கையாளல் நேரமும் செலவும் பெருமளவில் குறையும் என கூறப்படுகிறது. இந்த புதிய சேவையால், அப்பகுதியில் வணிக முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி