தீபாவளி பண்டிகையை முன்னிட்டுத் தனது பயனர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் செயலி புதிய சுவாரஸ்யமான அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் உள்ள லைக் (Like) பட்டனைத் தொடும்போது, திரையில் வண்ணமயமான வாண வேடிக்கை தோன்றும் வகையிலான அனிமேஷன் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தீபாவளிச் சிறப்பு அம்சம் பயனர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் இதுகுறித்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன.