சூதாட்ட இடைத்தரகரை கடத்திய கும்பல்

24பார்த்தது
சூதாட்ட இடைத்தரகரை கடத்திய கும்பல்
கிரிக்கெட் சூதாட்ட இடைத்தரகரான அங்கப்பராஜை நேற்று முன்தினம் (நவ.21 நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்தி சென்ற நிலையில், அவரை காரைக்குடி நடுச்சாலையில் இறக்கிவிட்டு தப்பியோடியுள்ளது. தகவலறிந்து சென்ற போலீசார் அங்கப்பராஜை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னை கண்களை கட்டி அழைத்து சென்றதாகவும், ஆனால் அடிக்கவோ அல்லது பணம் கேட்டு மிரட்டவோ இல்லை என்றும் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், தப்பியோடிய கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி