சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு ரூ.1,960 குறைந்துள்ளது. இன்று காலையில் மாற்றமின்றி விற்கப்பட்டு வந்த நிலையில், சற்றுமுன் ஒரு கிராமுக்கு ரூ.245 குறைந்து ரூ.13,140-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,960 குறைந்து ரூ.1,05,120-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.205-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது. சர்வதேச அளவிலும் தங்கம் விலை இன்று சரிந்துள்ளது.