சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. அதன்படி, 1 அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் $71.23 (இந்திய மதிப்பில் ரூ.6,746.93) உயர்ந்து $4,157.00 ஆகவும், வெள்ளி விலை $1.57 உயர்ந்து $57.33-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,515-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,120-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.240-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் சற்று உயர வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.