மதுரை - ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே இன்று (நவ.26) அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்தக் கோர விபத்தில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் காமின் கனி (50) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்துத் தகவல் அறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.