ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 550 பேருக்கு நபர் ஒருவருக்கு தலா ரூ.37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000 வீதமும் நேரடியாக மானியம் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை 31-01-2027-க்கு முன் அனுப்ப வேண்டும். முகவரி: ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால், சேப்பாக்கம், சென்னை 600 005