தினசரி உணவில் பச்சை வெங்காயத்தை சேர்த்து உண்பதால், அதில் நிறைந்துள்ள குவர்செடின் மற்றும் சல்ஃபர் கலவைகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்துவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதுடன், கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஒட்டுமொத்த உடல்நலனை மேம்படுத்துகின்றன.