உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய GTA 6 வீடியோ கேம் இன்று (நவ.19) இந்தியாவில் பிளேஸ்டேஷன் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் X, S ஆகிய சாதனங்களில் வெளியானது. GTA 4 வெளியான பிறகு 5 ஆண்டுகளில் GTA 5 வெளியிடப்பட்டது. ஆனால், 2013-ல் GTA 5 வெளியானதைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகமான GTA 6 வெளியாக 13 ஆண்டுகள் ஆகியுள்ளன. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியான இந்த கேம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.