தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் டிச., 4ஆம் தேதி ஓரிடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் டிச., 5ஆம் தேதி தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் மிதமான அல்லது லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.