தேனி, கோவை மாவட்டங்களில் கனமழை

6பார்த்தது
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயலான 'முரசு', கடந்த நவம்பர் 3-ஆம் தேதி அதிகாலை ஆந்திராவின் நெல்லூருக்கும் நர்சாப்பூருக்கும் இடையே ஒங்கோலுக்கு அருகில் கரையை கடந்தது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்த புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் இன்று தேனி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி