வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் தாக்கத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிகக் கனமழை பெய்வதற்கான 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. பொதுமக்கள், மீனவர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.