ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய கிளாமர் எக்ஸ் 125 (Glamour X 125) மாடல் பைக்கை ரூ.1.01 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேம்பட்ட பாதுகாப்பு அம்சமாக சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் (Single-channel ABS) பிரேக்கிங் வசதியுடன் வந்துள்ள இந்த பைக், கன் மெட்டல் கிரே, மேட் ஆக்சிஸ் கிரே, பிளாக் பேர்ல் ரெட் மற்றும் பிளாக் டீல் ப்ளூ ஆகிய 4 கவர்ச்சிகரமான வண்ணங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. பைக் பிரியர்களிடையே இந்த புதிய மாடல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.