அமைச்சர், அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

5பார்த்தது
அமைச்சர், அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
திருவண்ணாமலை கோயில் கிழக்கு ராஜகோபுரம் அருகே வணிக வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரமேஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவுகளை மாற்ற முயன்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கையை உடனடியாக அரசுக்குத் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி