மதுரை: மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பதற்காக குதிரை பேரம் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில், அதிமுக நிர்வாகியும் முன்னாள் துணை மேயருமான பி.எம். மன்னனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், ரூ.15 கோடி முதல் ரூ.30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்று (நவ.7) நேரில் ஆஜரான அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.