இதய ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த
நல்வாழ்வையும் பேண, செக்கில் ஆட்டப்பட்ட நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்
ஆகிய பாரம்பரிய எண்ணெய்களை மிதமான அளவில் பயன்படுத்துவது சிறந்தது
என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரே வகையான எண்ணெயை எப்போதும் பயன்படுத்தாமல், சமையல் முறைகளுக்கு ஏற்ப மாறுபட்ட எண்ணெய்களை பயன்படுத்துவது உடலுக்கு தேவையான நிறைவுறா கொழுப்பு அமிலங்களை சமமாக வழங்க உதவுகிறது.