சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆட்டோக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். சீருடை அணியாமல் ஆட்டோ ஓட்டிய ஓட்டுநர்களுக்கு ரூ.500 முதல் ரூ.1,500 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்டோக்களின் பக்கவாட்டுக் கண்ணாடிகளை உரிய முறையில் பொருத்தாமல், உள்ளே வைத்து இயக்கியவர்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட இருக்கைகளை அகலமாக அமைத்திருந்தாலும் அபராதம் விதிக்கப்பட்டது.