“தவெக ஆட்சி நீடித்தால் தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி செல்லும்” என
திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். அண்ணன் காப்பாற்றுவார் என நம்பி வாக்களித்த பெண்கள், காவல்துறை கூட இல்லையோ என அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், “கடந்த 4 மாதங்களில் 570 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பெண்களுக்கு எதிரானவை. குழந்தைகளுக்கான மருந்துகள், மருத்துவர்கள் குறித்து கவலைப்படாமல் மோதிரத்துக்கு செலவிடப்பட்டுள்ளது” என குற்றம்சாட்டினார்.