எல்லா கட்சியிலும் தனக்கு ர
சிகர்கள் இருக்கிறார்கள் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்திய அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'இந்த தேர்தல் மிகவும் வித்தியாசமாக உள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வருவதே மிகப்பெரிய மாற்றம்தான். எனக்கு எல்லா கட்சிய
ிலும் ரசிகர்கள் உள்ளனர். அதனால் இவருக்குதான் ஓட்டு போடனும் என சொல்ல மாட்டேன். விருப்பம் உள்ளவர்களுக்கு வாக்களியுங்கள்' என கேட்டுக் கொண்டார்.