மநீம தலைவர்
கமல்ஹாசன் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். "உங்கள் அனைவரின் ஆத்மார்த்தமான வாழ்த்துகள் என்னை நெகிழ வைக்கின்றன; ஒரு கலைஞனாக உங்களை எப்போதும் மகிழ்விப்பேன், அதே வேளையில் ஒரு தலைவனாக உங்கள் நல்வாழ்விற்காக தொடர்ந்து உழைப்பேன்" என்று அவர் கூறியுள்ளார். தொண்டர்கள் மற்றும் பல்வேறு
அரசியல் தலைவர்களின் அன்பும் வாழ்த்துகளும் தன் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியம் என தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.