தவெக MLA, பெண் ஆட்சியருக்கு முறையற்ற வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பிய சம்பவம் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்ததாக கவிதா ராமு தெரிவித்துள்ளார். கடந்த 11-ம் தேதி பாதிக்கப்பட்ட அதிகாரியை நேரில் தொடர்புகொண்டு பேசி ஆதரவு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தால் கலெக்டரும் அவரது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். ஆரம்பத்தில் புகார் அளிக்க அவர் விரும்பவில்லை. சமூக வலைதளங்களில் சம்பவம் நடைபெறவில்லை என்பதுபோல் வெளியான பதிவுகள் அவருக்கு வேதனை அளித்ததாக தெரிவித்துள்ளார்.