மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், அதனைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக
இந்தியா வாக்களித்துள்ளது. ஐ.நா. சபையில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் 133 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில்,
இந்தியா உள்ளிட்ட 33 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன. அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுவதாகக் கூறி
இந்தியா தனது நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.