ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) அண்மையில் உலகளாவிய உணவு வீணடிப்பு குறித்த முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உணவு வீணடிப்பின் மொத்த அளவைப் பொறுத்தவரை, சீனா முதலிடத்திலும்,
இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. நம் நாட்டில் ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 55 கிலோ உணவை வீணடிக்கிறார். உணவு வீணடிப்பைக் குறைப்பதில் அரசாங்கமும் மக்களும் இணைந்து பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.