ஐ.நா. சபையில் துருக்கிக்கு இந்தியா கடும் கண்டனம்

3பார்த்தது
ஐ.நா. சபையில் துருக்கிக்கு இந்தியா கடும் கண்டனம்
ஐ.நா. சபை மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றிற்கு இடையிலான உறவுகள் குறித்த வரைவு தீர்மான ஆலோசனைகளில் இருந்து இந்தியாவை துருக்கி புறக்கணித்துள்ளது. இத்தீர்மானத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட துருக்கியின் இச்செயலை கண்டித்து இந்தியா எதிர்த்து வாக்களித்ததுடன், அமெரிக்கா, இஸ்ரேல், கிரீஸ், அர்மேனியா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளும் தீர்மானத்திற்கு எதிராக தங்களது வாக்குகளை பதிவு செய்தன. இருப்பினும், 112 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் குறிப்பிட்ட வரைவு தீர்மானம் ஐ.நா.சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி