காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

1பார்த்தது
காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
அகமதாபாத்தில் நடைபெற்ற காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் திறம்பட செயல்பட்ட இந்திய வீரர்கள், ஆதிக்கம் செலுத்தி வெற்றியை தங்களதாக்கி கொண்டனர். முன்னதாக நடைபெற்ற மகளிர் பிரிவின் இறுதி போட்டியில் இந்திய அணி உகாண்டாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில், தற்போது ஆடவர் அணியும் கோப்பையை கைப்பற்றி தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி