இந்தியப்
பங்குச்சந்தை இன்று (ஆக.18) பெரும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிந்து 77,235 புள்ளிகளிலும், நிஃப்டி 132 புள்ளிகள் சரிந்து 24,154 புள்ளிகளிலும் முடிவடைந்தன. இதேபோல் பேங்க் நிஃப்டி 235 புள்ளிகளும், பின் நிஃப்டி 109 புள்ளிகளும் சரிவைச் சந்தித்தன. ஒட்டுமொத்த குறியீடுகளும் வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.