பங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை முதல் வர்த்தகம் தொடங்கிய நிலையில், ஆரம்பம் முதலே முதலீட்டாளர்களின் விற்பனை பதிவு செய்யப்பட்டது. தேசிய
பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி தற்போது 190 புள்ளிகள் சரிந்து 23,208 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 532 புள்ளிகள் சரிந்து 74,256 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. மேற்காசிய
போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.