சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, 1 அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் $185.24 (இந்திய மதிப்பில் ரூ.17,462.18) உயர்ந்து $4,117.85 ஆகவும், வெள்ளி விலை $2.96 உயர்ந்து $52.71-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,100-க்கும், ஒரு சவரன் ரூ.104,800-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.210-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம், வெள்ளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.