சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்து வர்த்தகமாகிறது. அதன்படி, 1 அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் $28.89 (இந்திய மதிப்பில் ரூ.2,738.76) குறைந்து $3,930.16 ஆகவும், வெள்ளி விலை $1.25 குறைந்து $49.59-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,800-க்கும், ஒரு சவரன் ரூ.1,02,400-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.200-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம், வெள்ளி விலையில் சிறிய மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.